1-5ஆம் வகுப்புக்கு அக்.12-ம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை அக்.12-ம் தேதி வரை நீட்டிப்பு என தகவல்.

ஆசிரியர்களுக்கான பயிற்சி காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் 12-ம் தேதி வரை நீடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளிலும், 1 முதல் 5ம் வகுப்பு வரையில் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு அளவில் பயிற்சி நடத்தப்பட உள்ளது. அதன்படி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அக்.10 முதல் 12 வரை எண்ணும், எழுத்தும் பயிற்சி நடப்பதால் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் முதல் பருவ தேர்வான காலாண்டு தேர்வு விடுமுறை அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆசிரியர்களுக்கான பயிற்சி காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது என தகவல் கூறப்படுகிறது. ஆனால், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வர வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment