31.1 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

இன்று வெளியாகுமா அறிவிப்பு? டெல்லியில் தனது ஆதரவாளர்களுடன் டி.கே.சிவகுமார் ஆலோசனை!

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் கார்கே உடன் ஆலோசனை நடத்திய பிறகு, டி.கே.சிவகுமார் டெல்லியில் ஆலோசனை.

டெல்லியில் தனது ஆதரவாளர்களுடன் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கர்நாடகாவில் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், டெல்லியில் தனது ஆதரவாளர்களுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் டி.கே. சிவகுமார்.

கர்நாடக முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இருவரும், காங்கிறீற்ஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து தனித்தனியே இன்று ஆலோசனை நடத்தினர். இதனால், இன்று அல்லது நாளைக்குள் முதலமைச்சர் யார் என்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடகா முதல்வர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் கார்கே உடன் ஆலோசனை நடத்திய பிறகு, டி.கே.சிவகுமார் டெல்லியில் உள்ள தனது வீட்டில், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். எனவே, கர்நாடக முதலமைச்சர் யார் என்ற இழுபறி இன்று முடிவுக்கு வருமா? அதன்படி, இன்று இறுதி அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்க்கபடுகிறது.