38 C
Chennai
Sunday, June 4, 2023

Spam call தொல்லை: அதிரடி காட்டிய TRAI…2 மாதத்தில் வருகிறது ‘DCA’ டிஜிட்டல் தளம்.!

ஸ்பேம் கால் மற்றும் தொல்லை தரும் குறுஞ்செய்திகளைக் கட்டுப்படுத்துவதற்காக,...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்.!!

வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில்...

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரையில் மாநாடு, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உறுப்பினர் சேர்க்கை, அடையாள அட்டை வழங்கும் பணி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும், விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் சந்திப்புக்கு பிறகு அவர்களது தரப்பினரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் விமர்சித்து வருகின்றனர்.

இதன்மூலம் ஏற்பட்ட நெருக்கடி குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கலாம். மேலும், நாளுக்கு நாள் இரு தரப்பினர் இடையே வார்த்தை போர் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. குறிப்பாக, கர்நாடகாவில் பாஜகவின் படுதோல்வி குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.