ராஜஸ்தானின் வெற்றி பயணத்தை தடுத்து நிறுத்துமா மும்பை ? வான்கடேயில் இன்று பலப்பரீட்சை ..!!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரின் 14-வது போட்டியாக இன்று மும்பை அணியும், ராஜஸ்தான் அணியும் இன்று மோதுகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் 14-வது போட்டியாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும் இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு மோதவுள்ளது. இது வரை விளையாடிய 2 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி வெற்றி இருக்கிறது, அதே போல மும்பை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி உள்ளது.

இதனால், இந்த ஐபிஎல் தொடரில் முதல் முறையாக மும்பை தனது சொந்த ஊரின் மைதானத்தில் விளையாட உள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த் போட்டியானது வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

நேருக்கு நேர்

இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் 28 முறை நேருக்கு நேர் விளையாடி உள்ளது. இதில் 15 முறை மும்பை அணியும், 12 ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுருக்கிறது. ஒரு போட்டி முடிவில்லாமல் இருக்கிறது. இரண்டுஅணிகளின் வீரர்களும் தரமும் கிட்ட தட்ட சமமாக இருப்பதால் இந்த போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள் (Probable Playing XI)

மும்பை அணி வீரர்கள் :

ரோஹித் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, நமன் திர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டிம் டேவிட், ஷம்ஸ் முலானி, பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, மபகா.

ராஜஸ்தான் அணி வீரர்கள் :

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிக்கி புய், ரிஷப் பண்ட் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.