கும்பகோணத்துக்கு இனி இலவச WIFI

தஞ்சாவூர்: கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு நாள்தோறும், 38 ரயில்கள் வந்து செல்கின்றன. தினமும், 5,000த்துக்கும் மேற்பட்டோர் இந்த ஸ்டேஷனை பயன்படுத்துகின்றனர். முக்கிய கோவில் நகரமாகவும், வணிக மையமாகவும் கும்பகோணம் திகழ்வதால், சுற்றுலா பயணியரும், வர்த்தகர்களும் அதிக அளவில் இங்கு வருகை தருகின்றனர். அதிக டிக்கெட் வருவாய் உள்ள, ‘ஏ’ கிரேடு ரயில்வே ஸ்டேஷனில் இலவச, ‘வைபை’ வசதி ஏற்படுத்த, ரயில்வே நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் முடிவெடுத்தது. இதையடுத்து, நேற்று முதல், கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில், இலவச வைபை வசதி செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக, நிலைய மேலாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment