மனைவியின் தவறான நடத்தை! வினோதமான தண்டனை கொடுத்த கிராம மக்கள்! இணையத்தில் வைரலான வீடியோ!

மனைவியின் தவறான நடத்தையால், வினோதமான தண்டனை கொடுத்த கிராம மக்கள்.

மத்தியப் பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர், குஜராத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவன்-மனைவி இருவரும் வேலையை முடித்துவிட்டு இருவரும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், வேலை செய்யும் இடத்தில் மனைவி தவறான தொடர்பில் இருப்பதாக, நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடம்  தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரது மனைவிக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்த கிராம மக்கள்,  கணவனை தூக்கி சாலையில் நடக்க வைத்துள்ளனர். மேலும் அவரின் பின்னால் சென்ற கிராம மக்கள் குச்சியால் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சிறிது தூரம் சென்றது கணவரின் எடை தாங்காமல் நிலைத்தடுமாறும் அந்த பெண்ணை கிராம மக்கள் குச்சி மற்றும் இதர பொருட்களால் தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த பெண்ணை காப்பாற்ற யாரும் முன்வராத நிலையில், இந்த காட்சியினை பாலரும் அந்த இடத்தில நின்று வீடியோ எடுத்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, அங்கு சென்ற காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.