#BREAKING: மெரினா திறப்பதில் தாமதம் ஏன்.? தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை.!

மெரினா மீன் அங்காடிகளை முறைபடுத்துவது, சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்குகள் வழக்குகள் விசாரணை இன்று  உயர் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது மெரினா திறப்பது குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர்.

அப்போது , நவம்பர் இறுதி வரை மெரினாவை திறக்க வாய்ப்பில்லைஎன  தமிழக அரசு தெரிவித்தது.  இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள் மெரினா திறப்பது குறித்து சென்னை மாநகராட்சியும், தமிழக அரசு முடிவு எடுக்காவிட்டால் நீதிமன்றமே தலையிட்டு பொதுமக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.

மேலும், மெரினா கடற்கரையை பொதுமக்களுக்கு திறப்பதில் தாமதம் ஏன்..? திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையை திறப்பதில் என்ன சிரமம்? என கேள்வி எழுப்பியது.  மேலும் வழக்கு விசாரணையை வருகின்ற நவம்பர் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று மெரினா திறப்பது குறித்து சென்னை மாநகராட்சியும்,  தமிழக அரசும் கலந்து யோசித்து உரிய முடிவை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன் மெரினா திறப்பது குறித்து கேட்டபோது அக்டோபர் 31-ஆம் தேதிவரை மெரினா திறப்பது வாய்ப்பில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்தது. பின்னர் மீண்டும் திறப்பது  குறித்து முடிவு செய்யப்பட்டு உரிய முடிவு எடுத்து தெரிவிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
murugan