பீப் பிரியாணி மட்டும் திருவிழாவில் இடம்பெறாதது ஏன்? – விளக்கம் கேட்டு நோட்டீஸ்

பீப் பிரியாணி மட்டும் திருவிழாவில் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இதற்கான பணிகள் ஆம்பூர் வர்த்தக மையம் கட்டடத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பிரியாணி திருவிழாவில் மட்டன் மற்றும் சிக்கன் பிரியாணிகளுக்கு மட்டுமே அனுமதி வழக்கப்பட்டுள்ளது. இதற்காக 22 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இங்கு  வரக்கூடிய மக்களுக்கு அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், பிரியாணி திருவிழாவில் சிக்கன் ரூ.50, மட்டன் ரூ.100 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, தலித், இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட வகைகளில் பிரியாணி இருக்கும் போது பீப் பிரியாணி மட்டும் திருவிழாவில் இடம்பெறாதது குறித்து விளக்கமளிக்க திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு மாநில தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.