லீவு நாட்களில் பள்ளிகள் செயல்பட்டால் கடுமையான நடவெடிக்கை எடுக்கப்படும்.! நாமக்கல் ஆட்சியர் அதிரடி.!

  • தமிழகத்தில் தற்போது அரையாண்டுதேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
  • கல்வித்துறையின் சுற்றறிக்கையை மீறி விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சில தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மேக்ராஜிடம் கேட்டபோது பின்தங்கிய மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகங்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கல்வித்துறையின் சுற்றறிக்கையை மீறி கல்வித்துறையின் சுற்றறிக்கையை மீறி விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். பின்னர் நேற்று உள்ளாட்சி தேர்தலின்போதும் கூட ஒரு சில தனியார் பள்ளிகள் செயல்பட்டது குறிப்பிடதக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்