மீண்டும் இந்திய இந்திய அணிக்குள் திரும்பி வந்தபோது விராட் கோலி எனக்கு ஆதரவளித்தார்- யுவராஜ்

விராட் கோலி தன்னை ஆதரித்ததாக யுவராஜ் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கை பிடிக்காதவர் யாரும் இருக்கமுடியாது, இவர் பல சாதனைகளையும் கையில் வைத் திருக்கிறார், குறிப்பாக யுவராஜ் சிங் என்று கூறினால் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 6பந்துகளில் 6 சிக்ஸர்கள் தான், இந்த சாதனையை எந்த ஒரு இந்தியன் கிரிக்கெட் வீரர்களும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்றே கூறலாம்.

இந்நிலையில் மேலும் யுவராஜ் சிங் இந்திய 2011 உலகக்கோப்பையை வெல்ல உதவியாக இருந்தவர் என்றும் கூட கூறலாம் அந்த தொடரில் அவருடைய மொத்த ரன்கள் 362 மேலும் 15 விக்கெட்டுகளை சாய்த்தவர்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது “நான் கிரிக்கெட்டில் நீண்ட நாள் கழித்து கம்பேக் கொடுத்து மீண்டும் அணிக்குள் திரும்பி வந்தபோது எனக்கு விராட் கோலி ஆதரவளித்தார். அவர் என்னை ஆதரவிக்கவில்லை என்றால் என்னால் மீண்டும் விளையாடி இருக்க முடியாது. ,மேலும் கடந்த 2019 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு குழுவினர் எனது பெயரை பரிசீலிக்கவில்லை என எனக்கு சொன்னதே தோனி தான்.

இந்நிலையில் மேலும் கடந்த 2011 உலகக் கோப்பை வரை தோனிக்கு என் மீது அதீத நம்பிக்கை இருந்தது. நான் தான் அவரது அணியில் பிரதான வீரர் என என்னிடம் அடிக்கடி கூறுவார், எனக்கு நோய்வாய்ப்பட்டு மீண்டு வந்த பிறகு அணியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. 2015 உலகக் கோப்பை அணியில் என்னை பரிசீலிக்காதது ஏமாற்றம் தான் என்றும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.