மாணவர்கள்‌ என்ன கப்பலில் கல்லூரி செல்வார்களா? – ஜெயக்குமார்

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால், கடல் போல காட்சியளிக்கிறது. மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

இந்த நிலையில், கனமழை எதிரொலியாக, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து, கலோரிகளுக்கு விடுமுறை அளிக்காதது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய அரசு! சென்னை,செங்கல்பட்டு,திருவள்ளுவர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பு கருதி உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும். மாணவர்கள்‌ என்ன கப்பலில் கல்லூரி செல்வார்களா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.