ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் சோனியா காந்தி, கார்கே.? காங். தலைவர்கள் கூறுவதென்ன.?

உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதியாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் (Pran Pratishtha) விழா வரும் ஜனவரி 22ஆம் தேதிநடைபெற உள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாலிவுட் நடிகர்கள் மாதுரி தீட்சித், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர்  பங்கேற்க உள்ளனர்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் : ரயில் நிலையத்தின் புதிய பெயர் இதுதான்…

ஆளும் பாஜக கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி,  பிரதான மற்ற அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதுகுறித்து அக்கட்சி செய்தி தொடர்பாளர் கூறுகையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது உண்மை தான். அழைத்ததற்ககு நன்றி என மட்டுமே தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர்கள் விழாவில் கலந்துகொள்வார்களா.? இல்லாயா என்பது பற்றி அப்போது காங்கிரஸ் கட்சியினர் தெளிவாக கூறவில்லை.

இந்நிலையில், இன்று ராமர் கோயில் விழாவிற்கு சோனியா காந்தி மற்றும் கார்கே அழைக்கப்பட்டதை காங்கிரஸ் பொதுச் செயலாளர்  ஜெய்ராம் ரமேஷ் உறுதிப்படுத்தினார். மேலும் அவர் கூறுகையில், ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கலந்து கொள்வது பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்பட்டு, உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்,” என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கான முறையான அழைப்பு இன்னும் தனக்கு வரவில்லை என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். என்னைப் பொறுத்த வரையில், எனக்கு அழைப்பு வரவில்லை, எனவே நான் விழாவில் கலந்து கொள்வது பற்றி முடிவெடுக்க வேண்டியதில்லை என்று சசிதரூர் குறிப்பிட்டார்.

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்குச் செல்ல விருப்பம்தான், ஆனால் 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வேண்டுமானால் ராமர் கோவிலுக்குச் செல்வேன் எனவும் சசிதரூர் கூறினார். ராமர் கோயில் வருகையை அரசியல் ரீதியாக பார்க்க  கூடாது என்றும், தனக்கு மதம் என்பது ஒரு தனிப்பட்ட பண்பு என்றும், கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர்களை ‘இந்து விரோதிகள்’ என்று முத்திரையும் குத்தக்கூடாது என்றும், காங்கிரஸ் தலைவர்கள் கொண்டால் அவர்ககளை பாஜக ஆதரவாளர்கள் போல பார்க்கக்கூடாது என்றும் சசி தரூர் கூறினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.