மகனுக்கு நேர்ந்த பரிதாப நிலை! பொக்லைன் இயந்திரம் மூலம் கொண்டு செல்லப்பட்ட தாயின் உடல்!

பொக்லைன் இயந்திரம் மூலம் கொண்டு செல்லப்பட்ட தாயின் உடல்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தெலுங்கானாவில் அர்முல் மண்டல் கிராமத்தை சேர்ந்த 55 வயது பெண்மணி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது மகன் தாயின் இறுதி சடங்கினை நடத்த மக்கள் அனுமதிக்காத நிலையில், உயிரிழந்த பெண்ணின் இரு மகள்கள் மற்றும் மற்றும் வயதான கணவர் ஆகியோருக்கு தொற்று இல்லை. அவரது மகன் கொரோனா தொற்று காரணமாக 5 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

தாய்க்கு இறுதி சடங்கு செய்ய யாரும் முன்வராத நிலையில், தாயின் உடலை பொக்லைன் இயந்திரம் மூலம் அடக்கம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, நிஜாமாபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், கிராம மக்களால் புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் இறுதிச்சடங்கு உரிய முறையில் நடத்தப்பட்டது. மேலும், இந்த இறுதி சடங்கில் நோய்தடுப்பு உடைகளுடன் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் கலந்து கொண்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.