அடேங்கப்பா என்ன ஒரு அட்டகாசமான கெட்டப்! லாபம் படத்திற்காக புதிய கெட்டப்பில் களமிறங்கிய மக்கள் செல்வன்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், தற்போது இவர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு லாபம் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இரண்டு கெட்டப்பில் களமிறங்குகிறார். இந்த கெட்டப்பில் அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் உள்ள விஜய் சேதுபதியின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.