மாஸ்க் அணியாததால் ரூ.21.53 லட்சம் அபராதம் வசூலித்த மேற்கு ரயில்வே..!

கொரோனா தொற்றுநோய் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா  தொற்றுநோய் தடுக்க முககவசம் அணியுமாறு அனைத்து மக்களையும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்துகின்றன. ஆனால் இன்னும் பலர் அரசுகளின் வார்த்தைகளை கேட்காமல் முககவசம் அணியாமல் வெளியில் செல்கின்றனர். இந்த சூழலில் முககவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கத் தொடங்கியது.

முககவசம் அணியாவிட்டால் ரயிலில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பதாக ரயில்வே அறிவித்தது. இந்நிலையில், முககவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ. 21.53 லட்சத்தை மேற்கு ரயில்வே வசூலித்தது. ஏப்ரல் 20 வரை 12,000 பேருக்கு அபராதம் விதித்ததாகக் கூறியது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மொத்தம் 12,824 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் 6,972 பேர் மார்ச் மாதத்தில் மட்டும் முககவசம் அணியாமல் பயணம் செய்தனர் என ரயில்வே தெரிவித்துள்ளது. அவர்களுக்கு ரூ.10,93,500 அபராதம் விதிக்கப்பட்டது. பிப்ரவரியில் முககவசம் அணியாமல் பயணம் செய்த 4,017 பேருக்கு ரூ.6,29,600 அபராதம் விதித்தனர்.

இந்த மாதத்தில் இதுவரை முககவசம் அணியாமல் பயணம் செய்த 1,835 பேருக்கு ரூ .4,30,500அபராதம் விதித்துள்ளனர். மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 58,924 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 351 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

author avatar
murugan