ஆறாவது முறையாக 200 பந்திற்கு மேல் மீதம் வைத்து வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி!

உலக கோப்பை தொடர் போட்டியில் நேற்று பாகிஸ்தான்,வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது போட்டியில் மோதியது.டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்கள் எடுத்து.பின்னர் 106 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 108 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 218 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது. இதற்கு முன்  1993-ம் ஆண்டு பாகிஸ்தான் எதிராக போட்டியில் 225 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இதுவரை ஆறுமுறை 200 பந்திற்கு மேல் மீதம் வைத்து வெற்றி பெற்று உள்ளது .
1999-ம் ஆண்டு லீசெஸ்டர் மைதானத்தில் ஸ்காட்லாந்து அணியுடன் 239 பந்து மீதம் வைத்தது.
1975-ம் ஆண்டு மான்செஸ்டர் மைதானத்தில் இலங்கை அணியுடன் 236 பந்து மீதம் வைத்தது.
2019-ம் ஆண்டு கிராவ் இஸ்லெட் மைதானத்தில் இங்கிலாந்து அணியுடன் 227 பந்து மீதம் வைத்தது.
2011-ம் ஆண்டு டாக்கா மைதானத்தில் பங்களாதேஷ் அணியுடன் 226 பந்து மீதம் வைத்தது.
1993-ம் ஆண்டு கேப் டவுன்  மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் 225 பந்து மீதம் வைத்தது.
2019-ம் ஆண்டு ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பாகிஸ்தான் அணியுடன் 218 பந்து மீதம் வைத்தது.
 

author avatar
murugan

Leave a Comment