இந்த வாரம் என்னென்ன விஷேசங்கள்…?

  • இந்த வாரம் என்னென்ன  விஷேங்கள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
  • மாதத்தில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று திருமால் கூறுவதாக ஐதீகம் அத்தகைய சிறப்பு வாய்ந்த மாதம் பிறக்கிறது.

டிச.,15-கார்த்திகை 29: சங்கரஹர சதுர்த்தி விரதம், முகூர்த்த நாள்,கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் கோவிலில் அனுமன் திருமஞ்சனம்,திருமயம் சத்தியமூர்த்தி பவனி,பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பு அபிஷேகம்.

டிச.,16-கார்த்திகை30: சடசீதி புண்ணியகாலம்,சங்கரன் கோவில் கோமதியம்மன் 1008 கலசாபிஷேகம்,கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் சன்னதியில் கருடாழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.அனைத்து சிவன் கோவில்களிலும் சங்காபிஷேகம்,திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி,அவிநாசி லிங்கேஸ்வரர் கார்த்திகை தீபக்காட்சி நடைபெறுகிறது.

டிச.,17-மார்கழி 1: தனுர்மாத பூஜை ஆரம்பம்,பெருமாள் கோவில்களில் திருப்பாவை உற்சவம் நடைபெறுகிறது.சிவங்கோவில்களில் திருவெம்பாவை உற்சவம் ஆரம்பம்.சுவாமிமலை பேராயிரம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருள்,திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆண்டாள் திருமஞ்சனம்.

டிச.,18 மார்கழி2:ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் பவனி நடைபெறுகிறது.திருவெண்காடு சிவன் சிறப்பு வழிபாடும்,நவகிரக மண்டபத்தில் புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சாத்தி வழிபடல்.

டிச.,19 மார்கழி3: இயற்கை நாயனார் குருபூஜை,அஷ்டமி பிரதட்சிணம்,மதுரை சொக்கநாதர் படியளக்கும் லீலை நடைபெறுகிறது.பெருஞ்சேரி வாகீஸ்வரர் பவனியும்,சுவாமி மலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்,திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை நடைபெறுகிறது.

 

author avatar
kavitha