#Breaking: அதிகரிக்கும் கொரோனா.. டெல்லியில் வார இறுதியில் முழு ஊரடங்கு- முதல்வர்!

டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், அம்மாநிலத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதேசமயத்தில், தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக வார இறுதி நாட்களில் (சனி, ஞாயிறு) முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று உத்தரவிட்டார். மேலும், உடற்பயிற்சி கூடங்கள், ஆடிட்டோரியங்களை மூடவும் உத்தரவிட்ட அவர், டெல்லி மருத்துவமனையில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.