, ,

நாகூரில் நெய்தல் பாரம்பரிய பூங்கா – நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

By

நாகை மாவட்டம் நாகூரில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு.

நாகை மாவட்ட மக்களின் வாழ்வியல் சூழல், வாழ்க்கை முறை, உணவு, கலை, பண்பாடு, ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் நெய்தல் பாரம்பரிய பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது.

பண்டைய தமிழர்களின் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் ரூ.2 கோடியில் 3.06 ஹெக்டர் பரப்பளவில் பூங்கா அமைக்கப்படும். நெய்தல் பாரம்பரிய பூங்காவில் பனைக்குடில்கள், பவளப்பாறை, முத்துச்சிற்பி மற்றும் மூங்கில் குகைகள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Dinasuvadu Media @2023