ஜேடிஎஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க மாட்டோம் – டிகே சிவகுமார்

பெருமான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கும் என டி.கே.சிவகுமார் பேட்டி.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், வாக்களித்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், கர்நாடகாவில் தேர்தலுக்கு பின் ஜேடிஎஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க மாட்டோம். பெருமான்மைக்கு தேவையான இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்கும் என்றார்.

அதாவது, தேர்தலுக்குப் பிறகு பாஜகவை எதிர்கொள்வதற்காக ஜனதா தளம்-மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடி-எஸ்) உடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைக்கும் வாய்ப்பை நிராகரித்தாக கூறப்படுகிறது. மேலும், காங்கிரசுக்கு 130 முதல் 150 இடங்கள் வரை கிடைக்கும் எனவும் நான் தொடர்ந்து கூறி வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனிடையே, கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்