இந்தியை தமிழ்நாட்டில் நுழையவிடமாட்டோம் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எக்காலத்திலும் ஏற்கமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என பேசியதற்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் தங்களை எதிர்ப்பை தெரிவித்து கண்டங்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது அமித் ஷாவின் பேச்சு நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இந்தி மட்டுமல்ல வேறு எந்த மொழியையும் உள்ளே நுழைய விடமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தளவில் தமிழும், ஆங்கிலமும்தான், மும்மொழி கொள்கையை எக்காலத்திலும் ஏற்கமாட்டோம். மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியதுபோல், தமிழ்தான் எப்போதும் இணைப்பு மொழி என்றும் தமிழை பிரதமரே சுட்டிக் காட்டி பேசி அதன் பெருமையை ஒப்புக் கொண்டுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்