ராமர் பாலத்திற்கு சேதாரமில்லாமல் இருந்தால் ஆதரிக்கிறோம்.! பாஜக எம்எல்ஏ பேச்சு.!

நாங்கள் நம்பும் கடவுள் ராமர் வாழ்ந்த காலத்தில் எழுப்பப்பட்ட பாலம் அது. அதற்கு சேதாரமில்லாமல் செய்தால் நாங்கள் வரவேற்கிறோம். அப்படி செய்தால் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறேன். – பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன். 

இன்று தமிழக சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ராமேஸ்வரம் கடல் பகுதியில் சேது சமுத்திரம் திட்டம் நிறைவேற்றப்படுவது குறித்த தீர்மானத்தை கொண்டு வந்தார். இதன் மீதான விவாதங்கள் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தின் போது, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில்,  மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் ராமேஸ்வரம் முதல் மண்டபம் வரையில் எந்த இடத்தில் கட்டுமானம் கட்ட முடியும் என தெரியவில்லை என்று தான் குறிப்பிட்டார்.  உறுதியாக முடியாது என்று சொல்லி இருக்காரா என தெரியவில்லை.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால், உங்களை  விட சந்தோச படுவது தென் தமிழகத்தை சேர்ந்த நாங்கள் சந்தோசப்படுவோம். அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டியுள்ளார்.

முதல்வர் தீர்மானம் குறிபிட்ட பகுதி கடல் ஆழமில்லா பகுதி. அங்கு  மண் எடுக்க எடுக்க நீரோட்டம் வந்து மண் நிரம்பி கொண்டே இருக்கும்.  மேலும் நாங்கள் நம்பும் கடவுள் ராமர் வாழ்ந்த காலத்தில் எழுப்பப்பட்ட பாலம் அது. அதற்கு சேதாரமில்லாமல் செய்தால் நாங்கள் வரவேற்கிறோம். அப்படி செய்தால் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரிக்கிறேன். என தெரிவித்தார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment