ஒப்பந்த விவசாயத்தில் நுழைவதற்கான எந்த திட்டமும் எங்களுக்கு இல்லை – ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

தாங்கள் எந்த விவசாய நிலத்தையும் வாங்க மாட்டோம் எனவும், ஒப்பந்த விவசாயத்தில் நுழைவதற்கான திட்டம் முற்றிலும் இல்லை எனவும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறக்கூடிய விவசாயிகளின் போராட்டங்களால் செல்போன் கோபுரங்களும் தாககப்பட்டு வருகிறது. ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான1500 க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பஞ்சாப்பில் விவசாயிகளால் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் செல்போன் கோபுரங்களை தாக்கும் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகளின் அவசர தலையீட்டை ரிலையன்ஸ் நிறுவனம் கோரியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் விவசாய வணிக ஒப்பந்தம் அல்லது கார்ப்பரேட் விவசாயத்தில் உள்ள எந்த நிலத்தையும் வாங்கும் திட்டத்தை வைத்திருக்கவில்லை எனக் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் ஒப்பந்த வேளாண்மை நோக்கத்திற்காக ரிலையன்ஸ் அல்லது எங்கள் துணை நிறுவனங்கள் எந்த ஒரு விவசாய நிலங்களையும் நேரடியாகவோ அல்லது முகமாகவும் பஞ்சாப் ஹரியானா அல்லது இந்தியாவில் வேறு எங்கும் வாங்கவில்லை எனவும், இனி அவ்வாறு செய்யக் கூடிய திட்டமும் தங்களுக்கு இல்லை எனவும் விவசாயிகளிடமிருந்து நியாயமற்ற ஆதாயங்களை பெறுவதற்காக ஒருபோதும் நீண்டகால ஒப்பந்தங்களில் தாங்கள் நுழைந்தது இல்லை எனவும், மேலும் விவசாயிகளிடமிருந்து உற்பத்தி விலையை விட குறைவாக வாங்கும் செயலை ஒருபோதும் செய்ய மாட்டோம் எனவும் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

author avatar
Rebekal