சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பவர்களா நீங்கள்? உடனே இதை படியுங்கள்…

தண்ணீர் என்பது நமது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால், அதனை எப்போது பருக வேண்டும் ?எப்போது பருக கூடாது என்று பல நெறிமுறைகள் உள்ளன. அதனை கடைப்பிடித்தால் மட்டுமே தண்ணீர் நமது உடலுக்கு உகந்தது. தவறான நேரத்தில் தண்ணீர் குடித்தால் அது நமது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பலருக்கு சாப்பிடும் போது தண்ணீர் இல்லாமல் சாப்பிட முடியாது. காரணம் இடையிடையே தண்ணீர் அவ்வபோது குடித்து கொள்வார்கள். ஆனால், அவ்வாறு தண்ணீர் குடிக்கக் கூடாது.
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் இரப்பையில் தண்ணீர் சென்று உணவை செரிமானம் செய்வதற்காக உண்டாகும் அமிலங்கள் தங்கள் தன்மையை இழந்து விடுகின்றன. அதாவது அந்த அமிலங்கள் நமது உணவில் உள்ள நச்சுக்களை அழிக்கும் திறன் கொண்டது. தண்ணீர் குடிப்பதால் அந்த சக்தியை அமிலங்கள் இழந்து விடுகின்றன. இதனால் நமது இரப்பை உணவு ஜீரணமாவதற்கு மிகுந்த நேரம் எடுத்துக் கொள்கிறது
உணவை நாம் உண்ணும் போது தண்ணீர் குடிப்பதால் நமது உமிழ் நீர் சுரக்கும் அளவும் குறைகிறது. உணவு செரிமானத்திற்கு உணவுடன் உமிழ்நீர் மிகவும் முக்கியமானது. உமிழ்நீர்  சரியான அளவில் நம் உணவில் கலக்காமல் இருந்தால் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு நேரம் ஆகிறது.
உணவு சாப்பிடுகையில் தண்ணீர் குடிப்பதால் நெஞ்செரிச்சல் உண்டாகிறது. செரிமான கோளாறு ஏற்பட்டு அதனால் நெஞ்சு எரிவது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.
மேலும், உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பு அளவையும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இதனை தடுக்க நமது உணவில் உப்பின் அளவை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். உப்பின் அளவு அதிகரிக்கும் போது தான் நமக்கு சாப்பிடும் போது தண்ணீர் தாகம் ஏற்படும். மேலும், உணவை நன்கு மென்று சாப்பிடுவதால் உமிழ்நீர் அதிகம் சுரக்கும் இதனால் நமது இரைப்பையின்  செரிமான நேரம் குறைக்கப்படும் இது நமது உடலுக்கு மிக நல்லது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.