உதகை பூங்காவில் கைகளை சுத்தம் செய்தால் மட்டுமே அனுமதி.!

சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவு காரணமாக மக்களாகிய நாம் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கவும், சுகாதாரமாக இருக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் எதிரொலியாக உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றூலா பயணிகள் அனைவருக்கும் கிருமி நாசினி கொடுத்து கைகளை தூய்மை செய்த பின்னரே பூங்காவில் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். இந்து பல்வேறு தரப்பு சுற்றூலா பயணிகளும் பூங்காவிற்கு வருவதால் தோட்டகலை துறை ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்