பேஸ்புக் பயனர்களுக்கு எச்சரிக்கை… தவறான தகவல் பரப்பினால் குழுக்கள் மூடப்படும்..!

பேஸ்புக்கில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தவறாக வழிநடத்துபவர்களின் பேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்கள் மூடப்பட்டு வருவதாகவும், அவை கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றன என்றும் பேஸ்புக் கூறியுள்ளது.

 தடுப்பூசி குறித்த துல்லியமான தகவல்களை பயனர்களுக்கு வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றும் இதற்காக, தடுப்பூசியின் தவறான தகவல்களை பரப்புவர்களை கண்காணித்து வருவதாக  பேஸ்புக் தெரிவித்துள்ளது.

மேலும், தடுப்பூசியின் தவறான தகவல்களை பரப்புவர்கள் கொரோனா தடுப்பூசி பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். இதனால், கொரோனா வைரஸ் தடுப்பூசியை முன்னறிவிக்கும் பேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்களும் மூடப்பட்டுள்ளன என பேஸ்புக் கூறியுள்ளது.

தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பயனர்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்களை அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், ஆஸ்திரேலிய அரசும் , உலக சுகாதார அமைப்பும் (WHO) இந்த பணியில் எங்களுக்கு உதவுகின்றன என பேஸ்புக் தெரிவித்துள்ளது.

நிறுவனம் காண்பிக்கும் தகவல்கள் கொரோனா வைரஸ் தொடர்பாக தேடும் ஒவ்வொரு பயனருக்கும் சென்றடைகின்றன  என தெரிவித்துள்ளது. மேலும், தவறான தகவல் முழுமையாக நிறுத்தப்படவில்லை என்று  பேஸ்புக் ஒப்புக்கொண்டது. ஆனால், கொரோனா பற்றிய உண்மைகள் அறிய ஒரு தனி பிரிவை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

author avatar
murugan