எச்சரிக்கை: விதிகளை மீறினால் கட்டடங்களுக்கு சீல் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை.

சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திட்ட அனுமதியில் குறிப்பிட்டவாறு அளவு, விவரக் குறிப்பின் அடிப்படையில் கட்டடங்களை கட்ட வேண்டும். மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது.

ராயபுரம் மண்டலத்தில் மார்ச் 17 முதல் 24 வரை விதிகளை மீறி கட்டிய 11 கட்டடங்கள் பூட்டி செல் வைக்கப்பட்டன. விதிகளை மமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் உரிமையாளர்கள் 125 பேருக்கு இடத்தை காலி செய்யுமாறு குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. இதனிடையே, சென்னை மேயர் பிரியா ராஜன் (28) மார்ச் 4-ம் தேதி மேயராக பதவியேற்றதில் இருந்து மக்கள் நலப்பணிகளை தொடர ஆரம்பித்துவிட்டார் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்