எச்சரிக்கை ..!! இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்காதீர்கள்,உங்கள் வங்கியின் ஒட்டுமொத்த பணமும் சுவாகா – RBI

வங்கிகளின் கட்டணமில்லா எண்ணைப் போன்ற போலியான மொபைல் எண்களைப் பயன்படுத்தி ஒரு சமூக விரோத கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எச்சரிக்கை தேவை

சமீபகாலமாக வங்கி மோசடிகள்  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது.வாடிக்கையாளர்களின் எண்ணிற்கு வங்கிகளிலிருந்து அழைப்பது போல் பேசி ஏடிம் யின் ரகசிய குறியீடுகளை பெற்று பணத்தை பறிக்கும் ஒரு மோசடி கும்பல் செயல்பட்டு வருகிறது.இந்த மாதிரியான மோசடி குறித்த எச்சரிக்கைகளை அரசு மற்றும் வங்கிகள் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

என்னதான் விழிப்புணர்வு செய்தாலும் மோசடி கும்பல் நாளுக்கு நாள் பல புது வழிகளில் தங்கள் திருட்டை செயல்படுத்திதான் வருகிறது.இந்நிலையில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அந்த நோட்டீஸை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்காக தனது இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது.

போலி டோல் ஃப்ரீ எண்

அதில் கூறியுள்ளதாவது வங்கிகளின் கட்டணமில்லா எண்ணைப் போன்ற மொபைல் எண்களைப் பயன்படுத்தி ஒரு சமூக விரோத கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு வரும் அழைப்புகள் வங்கிகளின் டோல் ஃப்ரீ எண்ணை போல் ஒத்து இருப்பதாகவும்,இதனை ட்ரூ காலர் போன்ற செயலிகளில் தேடினால் வங்கிகளின் பெயரையே காட்டுவதுபோல் அவர்கள் மாற்றியமைத்து,இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

ஒரு வங்கியின் கட்டணமில்லா எண் 1800 123 1234 (உண்மையான எண் அல்ல) என்று வைத்துக்கொள்வோம். மோசடி செய்யும் கும்பல் 800 123 1234 என்று உண்மையான எண்ணிற்கு ஒத்து இருப்பது போல் பயன்படுத்தி இந்த மோசடி செயலை நிகழ்த்துகிறது.அவ்வாறு வரும் அழைப்பில் மறுமுனையில் பேசும் மோசடி நபர் பாதிக்கப்பட்டவரின் டெபிட் / கார்டு,கடவுச்ச்சொல், ஓடிபி போன்ற முக்கியமான விவரங்களை வழங்குமாறு கேட்டுப்பெற்று பணத்தை பறித்து வருகின்றனர்.

உறுதிப்படுத்த வேண்டும்

இது போன்ற மோசடிகளிலிருந்து தப்பிக்க நீங்கள் அழைக்கவிருக்கும் நிறுவனம் அல்லது வங்கியின் கட்டணமில்லா எண்ணை உறுதிப்படுத்துவது எப்போதும் நல்லது,மேலும் எந்தவொரு வங்கியும் உங்கள் வங்கி கணக்கின் ரகசிய விவரங்களை கேட்பது கிடையாது.

 

author avatar
Castro Murugan