விஸ்வாசம் படத்திற்காக அஜித்தை புகழ்ந்த காவல் துணை ஆணையர்!!

தல அஜித் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்திருந்து. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த திரைப்படத்தில் அஜித் முதல் பாதியில் ஜாலியான நடிப்பின் மூலமும், இரண்டாம் பாதியில் தனது மகள் மீதான பாசமிகு நடிப்பின் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவரந்தது. 

இந்த படத்தில் அஜித் சிகெரெட் , மது போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. ஆபாச காட்சிகள் இல்லை. முக்கியமாக இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் போட்டுக்கொண்டு போவதும், காரில் செல்லும்போதெல்லாம் சீட் பெல்ட் பொட்டுகொண்டு போவதும் ரசிகர்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

இதனை குறிப்பிட்டு சென்னை காவல் ஆணையர் சரவணன்  தனது பேஸ்புக் பக்கத்தில், விஸ்வாசம் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதில் கார் ஓட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் போடுவதும், பைக் ஓட்டும்போதெல்லாம் ஹெல்மெட் போட்டிருப்பதும் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு அளித்துள்ளது. இன்னும் பல பாராட்டுக்களை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment