மது இல்லாத தமிழகம்,ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும்-கே.எஸ்.அழகிரி

மது இல்லாத தமிழகத்திற்கு ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில் ,கடந்த 28 நாட்களாக நடைமுறையில் உள்ள மக்கள் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு சமூகத்தில் ஆரோக்கியமான ஒரு மாற்றம் தென்படுவது முக்கிந்த மகிழ்ச்சியை தருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் 90% கள்ளச்சாராயம் தடுக்கப்பட்டு  விட்டதாக காவல்த்துறை உயர் அதிகாரி கூறியிருப்பது கூடுதல் மனநிறைவை தருகிறது.எத்தனை இலவச திட்டங்களோ, சமூக நல திட்டங்களோ நிறைவேற்றினாலும் அதன் மூலம் முழுமையாக பயன்பெறாமல் தடுப்பது பெரும்பாலான மக்களின் குடிப்பழக்கம் தான்.

எனவே சமூகத்தில் புற்று நோய்போல பரவிவரும் மதுப்பழக்கத்தில் இருந்து மது இல்லாத தமிழகம் என்ற லட்சியத்தை அடைய அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.