7,022.8 கோடி வருவாய் இழந்த பிரபல நிறுவனம்..!

வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனம் மார்ச் (Q4) காலாண்டில் ரூ. 7,022.8 கோடி வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.

பிரபல டெலிகாம் நிறுவனமான வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனம் மார்ச் (Q4 ) காலாண்டில் ரூ. 7,022.8 கோடி வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.இது முந்தைய காலாண்டில், 4,532.4 கோடியாக இருந்தது.மேலும்,கடந்த ஆண்டின் இதே காலாண்டில் (YOY), 11,643 கோடி நிகர இழப்பை பதிவு செய்திருந்தது.

மேலும்,நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 10,891 கோடி ரூபாயாக இருந்தது.இது தற்போது 12% குறைந்து 9,607.6 கோடி ரூபாயாக உள்ளது.

ஏனெனில்,வோடபோன் ஐடியா மார்ச் 31, 2021 வரை 267.8 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது.ஆனால்,ஜனவரி 1, 2021 முதல் அமல்படுத்தப்பட்ட உள்நாட்டு இண்டர்கனெக்ட் பயன்பாட்டுக் கட்டணம் (ஐ.யூ.சி) ரத்து செய்யப்பட்டதன் காரணமாக சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறைந்து இந்த வருவாய் இழப்பு ஏற்பட்டது என்றும்,இந்த காலாண்டில் வோடபோன் ஐடியாவின் நிகர கடன் 1,79,960 கோடி ரூபாயாக உள்ளது என்றும் நிறுவனம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதனால்,வோடபோன் ஐடியா பங்குகள் இன்று காலை 11:02 மணி நிலவரப்படி, 7.84 சதவீதம் குறைந்து ரூ. 9.17 க்கு வர்த்தகம் செய்யப்பட்டன.இதனால் சென்செக்ஸின் செயல்திறன் 0.6 சதவீதம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.