இதற்காகவே விஸ்வாசம் ஹிட் ஆகவேண்டும்!! இயக்குநர் விஜய் மில்டன்

அஜித் -சிவா கூட்டணியில் உருவான நான்காவது  படம் ‘ விஸ்வாசம் ‘.இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நயன் தாரா, யோகிபாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.இந்த படம் நேற்று உலகமெங்கும் வெளி வந்தது. இந்த படத்தை ரசிகர்கள் பொங்கல் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநர் விஜய் மில்டன் அஜித் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை கூறியுள்ளார்.அதாவது நடிகர்கள்  சிலர் ‘உங்கள் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவேண்டும் ‘ என படம் வெளி வரும் முன்பு கூறுவார்கள்.

ஆனால் படம் வெளியாகி தோல்வி அடைந்தால் மீண்டும் அந்த இயக்குனர் இயக்கும் படங்களில் நடிக்க மாட்டார்கள். ஆனால் தல அஜித் கொடுத்த வாக்கை காப்பாற்றும் குணம் உடையவர்.

சமீபத்தில் வெளியான விவேகம் அஜித் -சிவா கூட்டணியில் உருவான படம் ஆகும்.மேலும் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. தல அஜித் ஏற்கனவே அடுத்த படத்தில் உங்கள் இயக்கத்தில் தான் நடிப்பேன் என்று சிவாவிடம் வாக்கு கொடுத்துள்ளார்.  அஜித் சிவாவிடம் கொடுத்த வாக்கை தற்போது  காப்பாற்றியுள்ளார். எனவே இந்த காரணத்திற்காகவே  ‘விஸ்வாசம் ஹிட் ஆகவேண்டும் ‘ என இயக்குனர் விஜய் மில்டன் கூறியுள்ளார்.

Leave a Comment