இந்த மாநிலத்தில் கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் ரத்து.! யார் யாருக்கு எத்தனை மார்க்?!

விஸ்வ பாரதி பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கிவரும் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் தற்போது தங்கள் பல்கலைக்கழகத்தின் கீழ் பயிலும் கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்துள்ளது. மேலும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளின் மதிப்பெண்கள் வேறு வழியில் கணக்கிடப்பட உள்ளதாம்.

அதாவது, 100% மதிப்பெண்ணில் மாணவர்கள் ஏற்கனவே எழுதிய இரண்டு செமஸ்டர்களின் மதிப்பெண்களின் சராசரியில் 60% மதிப்பெண்ணும், மீதமுள்ள 40 சதவீதத்திற்கு இன்டர்னல் மதிப்பெண், வருகைப்பதிவேடு, அசைன்மென்ட் (வீட்டு பாட்டம்)  உள்ளிட்ட மற்ற காரணிகள் மூலம் மதிப்பிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவை விஸ்வ பாரதி பல்கலைக்கழக தேர்வு குழு தெரிவித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.