ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தை நோக்கி விராட்.. வெளியான பட்டியல்..!

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன்கில் 826 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாகிஸ்தானின் பாபர் அசாம் (826 புள்ளிகள்) 2-வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உலகக்கோப்பை அரையிறுதியில் சதம், இறுதிப்போட்டியில் அரைசதம் அடித்து 791 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், ரோஹித் சர்மா 769 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

விராட் தற்போது மூன்றாம் இடத்தில் இருந்தாலும், சுப்மன் கில்லுக்கும் அவருக்கும் இடையே 35 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. கோலி கடந்த 2017 முதல் 2021 வரை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக ஒருநாள் பேட்டிங்கில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தார். இந்திய அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஒருநாள் தொடரில் விராட்க்கு ஓய்வு கொடுக்கவில்லை என்றால்  பாபர் அசாம், சுப்மன்கில் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு ஒருநாள் போட்டிகளில் முதலிடத்திற்கு வர வாய்ப்புள்ளது.

1. சுப்மான் கில் (இந்தியா, 826 புள்ளிகள்)
2. பாபர் அசாம் (பாகிஸ்தான், 824 புள்ளிகள்)
3. விராட் கோலி (இந்தியா, 791 புள்ளிகள்)
4. ரோஹித் சர்மா (இந்தியா, 769 புள்ளிகள்)
5. குயின்டன் டி காக் ( தென்னாப்பிரிக்கா, 760 புள்ளிகள்)

ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர் தரவரிசை:

ஒருநாள் போட்டி பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் கேசவ் மஹராஜ் (741) புள்ளிகளுடன் முதலிடத்தையும், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் (703 ) புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்தியா வீரர் முகமது சிராஜ் (699) புள்ளிகளுடன் ஒரு இடம் சரிந்து மூன்றாவது இடத்திலும், பும்ரா (685) நான்காவது இடத்திலும் உள்ளனர். குல்தீப் யாதவ், 667 புள்ளிகளுடன், ஆப்கானிஸ்தானின் ரஷித் கானுடன் கூட்டாக ஆறாவது இடத்தில் உள்ளார்.

1. கேசவ் மஹராஜ் (தென் ஆப்பிரிக்கா, 741 புள்ளிகள்)
2. ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா, 703 புள்ளிகள்)
3. முகமது சிராஜ் (இந்தியா, 699 புள்ளிகள்)
4. பும்ரா (இந்தியா, 685 புள்ளிகள்)
5. ஆடம் ஜம்பா ( ஆஸ்திரேலியா, 675 புள்ளிகள்)

ஒருநாள் கிரிக்கெட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.

 

author avatar
murugan