சர்வதேச கிரிக்கெட்டில் பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி.!

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி, 72 சதங்களை அடித்து பாண்டிங்கை முந்தியுள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 72 சதமடித்துள்ளார், மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 71 சதங்கள் அடித்த பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 1,213 நாள்களுக்கு பிறகு விராட் கோலி, இந்த சதத்தை, வங்கதேசத்திற்கு எதிராக அடித்துள்ளார். தற்போது 72 சதங்களுடன் விராட் கோலி இரண்டாவது இடமும், 100 சர்வதேச சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே கோலியை விட அதிகபட்சமாக முதலிடத்தில் உள்ளார்.

author avatar
Muthu Kumar

Leave a Comment