வீடியோ :பசி கொடுமையால் தன் உடலையே விழுங்கும் ராஜ நாகம் !

பென்சில்வேனியாவில் Forgetten Friend Reptile sanctuary என்ற  ஊர்வன சரணாலயம் ஓன்று இயங்கி வருகிறது. இந்த சரணாலயத்தில் பாம்பு வகைகள் , ஆமை வகைகள் போன்ற உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்ற ராஜா நாகம் ஓன்று தன்னை தானே விழுங்கும் வீடியோ ஓன்று வெளியாகி உள்ளது.இந்த காட்சியை பார்த்த பாம்பு வல்லுநர் ஜோதக்கர் தான் செல்போன் மூலம் முகநூலில் லைவ் வீடியோ செய்து உள்ளார்.இந்த விடியோவை  சிலர் ஆச்சரியதுடன் பார்த்தனர்.

https://www.facebook.com/forgottenfriend/videos/2047733215534817/

இதுகுறித்து பாம்பு வல்லுநர் ஜோதக்கர் கூறுகையில் ,பொதுவாக சில பாம்புகளுக்கு பசி வந்தால் மற்ற பாம்புகளை விழுங்கும்.சில நேரங்களில் தன்னை தானே விழுங்கி கொள்ள முயற்சி செய்கின்றனர்.அது தனது உடல் தான் என உணர்ந்தால் விழுங்குவதை விட்டுவிடும்.

ஆனால் இந்த சரணாலயத்தில் பாம்புகள் முறையாக பராமரித்து வருகின்றோம் அப்படி இருக்கையில் ஏன் இந்த பாம்பு இப்படி செய்தது என தெரியவில்லை.அந்த பாம்பு மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என ஜோதக்கர் கூறினார்.

 

author avatar
murugan