சிறையில் வீடியோ கால் வசதி – தமிழ்நாடு அரசு அரசாணை!

சிறைவாசிகளின் வசதிக்கேற்ப தொலைபேசி பேசும் கால அளவை அதிகரித்துள்ளதோடு, வீடியோ கால் பேசும் வசதியையும் அறிமுகப்படுத்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

நிலுவையில் உள்ள மசோதாக்கள்..! முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!

அந்த அரசாணையில், சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோ) கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை மாதத்திற்கு 10 முறை ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, காணொளி (வீடியோ) தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jail
Jail Imagesource TwitterNandhini
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.