நிலுவையில் உள்ள மசோதாக்கள்..! முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!

கடந்த டிச 1-ஆம் தேதி ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதி, ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். ஆளுநர் முதலமைச்சரிடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது.  முதலமைச்சருடன் ஆளுநர் அமர்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டால் வரவேற்போம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்தவருக்கும் ரூ.6000 நிவாரணம்.! எப்படி விண்ணப்பிக்காலம்.?

பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பது சரியாக இருக்கும். முட்டுக்கட்டைக்கு ஆளுநர் தீர்வு காணாவிட்டால் நாங்கள் உத்தரவிட நேரிடும் என  தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், தற்போது நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல்  அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக முதலமைச்சரை ஆளுநர் அழைத்து பேச வேண்டும் என  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.