வேங்கைவயல் விவகாரம்.! DNA டெஸ்ட் தோல்வி.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன.? 

கடந்த 2022 டிசம்பர் மாதம் 26ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள பட்டியல் இன மக்கள் வசிக்கும் தெருவில் இருக்கும் குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனித கழிவுவுகளை கலந்தனர். பட்டியலின மக்கள் வசிக்கும் நடைபெற்ற இந்த அருவெறுக்கதக்க செயல் தமிழகம் முழுவதும் பூதாகரமாக வெடித்தது.

திமுக எம்எல்ஏ மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! FIR-ல் வெளியான தகவல்கள்

இந்த செயலை செய்த குற்றவாளிகள் யார் என முதலில் புதுக்கோட்டை காவல்துறையினர் விசாரணையினை தொடங்கினர். அதனை தொடர்ந்து தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 371 நாட்களாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருந்து வருகிறது.

சிபிசிஐடி போலீசார் இதுவரை 221 பேரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சந்தேகத்திற்கு இடமான குறிப்பிட்ட 31 பேரிடம் மட்டும் டிஎன்ஏ (DNA) பரிசோதனை மேற்கொண்டனர். மனித கழிவு கலந்த குடிநீர் மாதிரிகளுடன் , 31 பேரின் டிஎன்ஏவை சென்னை மைலாப்பூர் தடவியல் ஆய்வக நிபுணர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.

இந்த ஆய்வு முடிவின்படி, டிஎன்ஏ மாதிரிகள் , மனித கழிவு கலந்த குடிநீர் மாதிரிகளுடன் ஒத்துப்போகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அடுத்தகட்டமாக குற்றவாளிகளை கண்டறிய சந்தேகத்திற்கிடமான குறிப்பிட்ட 10 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.