விஏஓ வெட்டிக்கொலை – குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் : ஆட்சியர் செந்தில்

விஏஓ வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி தரப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் உறுதி. 

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர்.

விஏஓ வெட்டிக்கொலை

இதனையடுத்து, படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ள நிலையில், மீதமுள்ள குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அவர்கள் கூறுகையில், விஏஓ வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெறுகிறது. விஏஓ லூர்து பிரான்சிஸ் நேர்மையானவர், ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றியவர். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கி தரப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.