அசத்தலான வலிமை அப்டேட் இதோ.! ரசிகர்களே 3.30க்கு விசிலடிக்க தயாராகுங்கள்.!

H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள வலிமை படத்திலிருந்து தீம் மியூசிக் வீடியோ இன்று மதியம் 3.30க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை H.வினோத் எழுதி இயக்கியுள்ளார். அஜித்திற்கு பிடித்தமான பைக் ரேஸிங் மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளதால் படத்திற்கு ஏகபோக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே கிளசம்பஸ் வீடியோ, மேக்கிங் வீடியோ, 2 பாடல்கள் என வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனை தொடர்ந்து வலிமை டீசர் இன்று வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. உண்மையில் வெளியாகுமா இல்லை வெறும் வதந்தியா என எதிர்பார்த்த நிலையில்,

சோனி மியூசிக் அதிகாரபூர்வ தளத்தில் இருந்து வலிமை விசில் தீம் வீடியோ இன்று பிற்பகல் 3.30க்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது 3.30 ஆகும் என ரசிகர்கள் கடிகாரத்தை பார்த்துக்கொண்டு அறிவித்த போதிலிருந்தே காத்திருக்கின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.