உத்தரப்பிரதேசம் : 4.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளோம் – முதல்வர் யோகி!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளோம் என அம்மாநில முதல்வர் யோகி கூறியுள்ளார்.

உத்திரபிரதேச வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் துறையில் உதவி பொறியாளர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 33 பேருக்கு நியமன ஆணைகளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் பேசுகையில் 2002 முதல் 2017 இடையேயான ஆண்டுகளை ஒப்பிடும்போது, 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு மற்றும் தனியார் துறைகளில் பல மடங்கு வேலை கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

வேலை நியமனத்தை பொறுத்தவரை எந்த போட்டியாளருக்கும் யாருடைய பரிந்துரையும் தேவையில்லை. நியமனத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பதாக சிறு தடயம் கிடைத்தாலும் கூட அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும், 2017ம் ஆண்டு முதலான நான்கரை ஆண்டுகளில் நியமனங்களை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துகிறோம். மேலும் இந்த நான்கரை ஆண்டில் மாநில அரசின் பல்வேறு துறைகளில் 4.5 லட்சம் இளைஞர்கள் அரசு வேலை பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal