அமெரிக்க போர் கப்பலை அட்லாண்டிக் கடலில் பரிசோதனை..! பயங்கர அதிர்வு..!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலை பரிசோதிக்க அட்லாண்டிக் கடலில் வெடிக்கப்பட்ட வெடிகுண்டால் ஏற்பட்ட அதிர்வு ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவானது.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்க போர் கப்பல்கள் பெரிதும் உதவியாக இருந்துள்ளது. அப்போது இருந்த ஜனாதிபதி ஜெரால்டு ஆர் போர்ட் சிறப்பாக போரை வழிநடத்தியுள்ளார். அதன் காரணமாக அவரின் பெயரில் தற்போது இருக்கும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு அமெரிக்க போர் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பலை பரிசோதிக்க முடிவு செய்துள்ளனர்.

விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் போரின் போது ஏற்படும் குண்டுவெடிப்புகள் மற்றும் கடுமையான தாக்குதல்களால் பாதிக்கப்படாமல் இருக்கிறதா என்பதை சரிபார்க்க பரிசோதனை நடத்தப்படும். அதே போன்று தற்போது தயாரிக்கப்பட்ட ஜெரால்டு ஆர் போர்ட் என்ற போர்க்கப்பலை அட்லாண்டிக் கடலில் பரிசோதனை செய்துள்ளனர். இதற்கு 18,144 கிலோ கிராம் வெடிமருந்தை வெடித்து சோதனை செய்துள்ளனர்.

சோதனையின் போது கடல் நீர் பெரிய அளவில் மேலெழும்பியுள்ளது. இந்த வெடிமருந்தால் பயங்கர அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்க கப்பற்படை தெரிவித்துள்ளதாவது, தயாரிக்கப்பட்ட புதிய போர்க்கப்பல் சோதனையில் முழு அதிர்வு திறனை மேற்கொண்டது. மேலும், இது கடினமான சூழ்நிலையிலும் போருக்கு தயாராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.