#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் -உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஜனவரி இறுதிக்குள் முடிக்க வேண்டிய நிலையில் கூடுதல் நாட்களை அனுமதிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 4 மாதத்தில் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர்  மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஜனவரி 27-க்குள் (அதாவது இன்று) தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால்,  மாநில தேர்தல் ஆணையம்  தேர்தலை இன்னும் நடத்தி முடிக்கவில்லை.

இந்நிலையில், 40 நாட்கள் கூடுதல் கால அவகாசம் கோரி தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  தேர்தல் நடத்த கூடுதலாக எடுத்துக்கொண்ட நாட்களுக்கு அனுமதி வழங்க மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும் மறைமுக தேர்தல் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan