UPWvsMI : 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது யூபி வாரியர்ஸ்..!

மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த யூபி வாரியர்ஸ் அணி 159 ரன்கள் குவித்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் 10-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் யூபி வாரியர்ஸ் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற யூபி வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய யூபி வாரியர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்துள்ளது.

யூபி வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக அலிசா ஹீலி 58 ரன்களும், தஹ்லியா மெக்ராத் 50 ரன்களும் குவித்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணியில் சைகா இஷாக் 3 விக்கெட்டுகளும், அமெலியா கெர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment