UPWvsGG : குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவிப்பு..!

மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரில் யூபி வாரியர்ஸ்க்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்துள்ளது.

இந்த ஆண்டு அறிமுகமான மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 அவர்களின் ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் குவித்துள்ளது.

குஜராத் அணியில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 46 ரன்களும், ஆஷ்லே கார்ட்னர் 26 ரன்களும், மேக்னா 24 ரன்களும் குவித்துள்ளனர். யூபி வாரியர்ஸ் அணியில் தீப்தி சர்மா மற்றும் சோஃபி எல்லஸ்டன் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர். யூபி வாரியர்ஸ் அணி வெற்றி பெற 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment