UPvsDC : யுபி வாரியர்ஸ் அதிரடி ஆட்டம்..! டெல்லிக்கு இதுவே இலக்கு..!

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த யுபி வாரியர்ஸ் அணி 138 ரன்கள் குவித்துள்ளது.

மகளிர் ஐபிஎல் தொடரின் 20-வது போட்டியில் யுபி வாரியர்ஸ் பெண்கள் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்துள்ளது.

UPvsDC

யுபி வாரியர்ஸ் அணியில் அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் 58 ரன்களும், அலிசா ஹீலி 36 ரன்களும் குவித்துள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஆலிஸ் கேப்ஸி 3 விக்கெட்டுகளையும், ராதா யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற 139 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment