இனி ஜே.இ.இ தேர்வு அவரவர் தாய் மொழியிலே… மத்திய அமைச்சர் அறிவிப்பு…

இந்தியா முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜெ.இ.இ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைவது  அவசியம்.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஜெ.இ.இ தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள்  மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தன. தற்போது இந்த கோரிக்கை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு  ஜெ.இ.இ முதன்மை தேர்வு மற்றும் பிந்தைய  தேர்வு ஆகிய இரு கட்டங்களாக நடத்தப்படும். ஜெ.இ.இ (மெயின்) தேர்வுகள் இனிமேல் பிராந்திய மொழியில் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். மத்திய மந்திரியின் இந்த அறிவிப்பை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் வரவேற்றுள்ளன.
author avatar
Kaliraj