Union Minister JP Nadda

மாநிலங்களவை தலைவரானாராக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தேர்வு.!

By

டெல்லி: 18வது மக்களவை தேர்தல் முடிந்து முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று துவங்கியது. திங்கள், செவ்வாய் என இரு தினங்களிலும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன் பிறகு நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்று குரல் வாக்கெடுப்பில் NDA வேட்பாளர் பாஜக எம்பி ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யபட்டார்.

இதனை அடுத்து, இன்று குடியரசு தலைவர் உரையுடன் வழக்கமான நாடாளுமன்ற நிகழ்வுகள் தொடங்கின. குடியரசு தலைவர் உரை முடிந்த உடன் மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அப்போது மாநிலங்களவையின் புதிய தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தேசிய பாஜக தலைவருமான ஜே.பி.நட்டா அறிவிக்கப்பட்டார். மக்களவை தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பில் உள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இருக்கிறார். மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023