ஜம்மு-காஷ்மீருக்கு அலுவல் மொழியாக 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி.!

ஜம்மு-காஷ்மீருக்கு அலுவல் மொழியாக 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜம்முகாஷ்மீர்  மாநிலத்திலிருந்து வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்முகாஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதில், ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதா 2020 ஐ அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, காஷ்மீரி, டோக்ரி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய  5 மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும் என்று பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், மசோதா குறித்த கூடுதல் விவரங்களை ஜவடேகர் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத்தின் பருவமழை அமர்வு செப்டம்பர் 14 முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan